News August 8, 2025

இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் தமிழக அரசால் நடத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்குகொள்கிறார்கள் இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி, காயல்பட்டினம், பெருங்குளம், சாத்தான்குளம், புதூர், உடன்குடி ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.

Similar News

News August 8, 2025

தூத்துக்குடி: நாய்கள் தொல்லையா.! உடனே அழையுங்கள்..

image

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*

News August 8, 2025

விநாயகர் சதுர்த்தி விழா.. தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாடு!

image

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கொண்டாட மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். களிமண் போன்ற இயற்கை சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதி உள்ளது. பிளாஸ்டிக், தெர்மாகோல், நச்சு சாயங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. வைக்கோல் பொருட்கள் மட்டுமே அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும். குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

News August 7, 2025

தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஆக. 7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!