News June 14, 2024
இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம்: போஸ்டர் வைரல்

தென்காசி 2024 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தென்காசியில் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், “இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம் ஒட்டுமொத்த மனங்களையும் வென்றெடுப்போம் என எழுதப்பட்டுள்ளது. இவர் இங்கு 7முறை போட்டியிட்டு தோல்வியை மட்டுமே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 10, 2026
தென்காசி: டூவீலர் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 2 பைக்குகள் மோதிக் கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பிரவீன், ரஞ்சித் ஆகியோர் பைக்கில் ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் சாலையைக் கடக்க முயன்றபோது, ஜெகதீசன் ஓட்டிவந்த பைக் இவர்கள் மீது மோதியது. இதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News March 10, 2026
தென்காசி: அரசு பஸ்சில் பயணியிடம் ரூ.25,000 அபேஸ்

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (58). இவர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து நெல்லைக்கு செல்ல அரசு பேருந்தில் எறியுள்ளார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கால்சட்டையின் பை பிளேடால் அறுக்கப்பட்டு, ரூ.25 ஆயிரம் பணத்தை மர்மநபர் திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 10, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (09-03-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.


