News August 3, 2024
இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 3, 4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து வருவதால் குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 22, 2025
செங்கல்பட்டு: காதலி பேச மறுத்ததால் மாணவன் தற்கொலை!

ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்டோ சுஜன் (19) பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இவருடன் டியூஷனில் படித்த மாணவியும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் ஆண்ட்டோ சுஜனிடம் பேச மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுஜன், டிச-20 தனது அறையில் தற்கொலை செய்துள்ளார், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினார்.
News December 22, 2025
செங்கல்பட்டு: பைக் விபத்தில் வாலிபர் பலி!

திம்மாவரத்தைச் சேர்ந்த நவீன் (20), நேற்று டிச-20 இரவு தனது நண்பர் தீபக் (18) என்பவருடன் பைக்கில் காஞ்சிபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். ஆத்தூர் பழத்தோட்டம் அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நவீன் உயிரிழந்த நிலையில், தீபக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News December 22, 2025
செங்கல்பட்டு: 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சிங்கபெருமாள் கோவில் அருகே, கடந்த மாதம் ஆகாஷ் என்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முத்துவீரா, விக்கி, மாரியப்பன், கோபி மற்றும் சந்தோஷ் ஆகிய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், இதற்கான ஆணை நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழங்கினர்.


