News October 23, 2024

இன்றும் கோயமுத்தூருக்கு எச்சரிக்கை

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நாட்களாக மிகவும் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஆரஞ்சு அலட் விடப்பட்ட சூழ்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 9 சென்டி மீட்டர் மழை பதிவானது. அனேக பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால் கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர் .

Similar News

News January 29, 2026

கோவை: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

கோவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். (SHARE பண்ணுங்க)

News January 29, 2026

BREAKING: கோவையில் தங்க கட்டிகள் கடத்தல்

image

வாளையார் சோதனைச் சாவடி வழியாகத் தங்கம் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்தை வழிமறித்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் பயணித்த நிபின் (29) என்ற இளைஞரின் உடைமைகளைச் சோதனை செய்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த 6 கிலோ 140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின், அவரை கைது செய்தனர்.

News January 29, 2026

POWER CUT: கோவையில் இங்கெல்லாம் மின்தடை

image

கோவை மாவட்டத்தில் இன்று(ஜன.29) காலை 9 மணி முதல் 4 மணிரை வரை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், சாய்பாபா காலணி, இடையர்பாளையம், சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், பட்டணம் புதூர், பீடம்பள்ளி ஒரு பகுதி, இலுப்பந்தம், இரும்பறை, கவுண்டம்பாளையம், மூக்கனூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஆகும்.

error: Content is protected !!