News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 6, 2026
இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ள Top 10 நாடுகள்

இந்தியாவின் நிலையான வளர்ச்சி காரணமாக உலகளவில் அந்நிய முதலீட்டிற்கு விருப்பமான இடமாக இந்தியா திகழ்கிறது. இதனால், இந்தியாவின் உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் நீண்ட கால மூலதனத்தை இது கொண்டு வருகிறது. இது நாட்டின் GDP-ஐயும் அதிகரிக்கிறது. அதன்படி, 2025-ல் இந்திய பங்கு சந்தையில் எந்த நாடு எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள். SHARE.
News April 6, 2026
கமலால் காசு கொடுத்து ஏமாந்துவிட்டனரா மநீமவினர்?

தேர்தலில் போட்டியில்லை என கமல் அறிவித்ததால் விருப்ப மனு கட்டணமாக வாங்கிய ₹50 ஆயிரத்தை திருப்பி தருமாறு மநீமவினர் கோரியதாக தகவல் கசிந்தது. இந்நிலையில், விருப்ப மனு கட்டணம் என்பது திருப்பி தரக்கூடிய கட்டணமில்லை எனவும், அது கட்சிக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது எனவும் நிர்வாகிகள் கூறினர். மேலும், யாரும் கட்டணத்தை திருப்பி கேட்கவில்லை எனவும் இது எதிர்கட்சிகள் பரப்பும் தவறான தகவல் என்றும் தெரிவித்தனர்.
News April 6, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,120 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை 3 நாள்களுக்கு பிறகு மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹140 குறைந்து ₹13,810-க்கும், சவரனுக்கு ₹1,120 குறைந்து ₹1,10,480-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் தொடர்ந்து 5-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹255-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,55,000-க்கும் விற்பனையாகிறது. SHARE IT.


