News February 22, 2026

இன்றுமுதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை துவக்கம்

image

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை இன்றுமுதல் தொடங்குகிறது. இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் <<19202101>>7 பேர் கொண்ட<<>> குழுவை திமுக நியமித்துள்ளது. இன்று மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதிமுக இதுவரை அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து பேச அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழு அமைக்கவில்லை.

Similar News

News February 22, 2026

9 மாவட்டங்களில் மழை அலர்ட்

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல், மதுரையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், அடுத்த ஒருமணி நேரத்திற்கு தேனி, திருப்பூர், நெல்லை, குமரி, ஈரோடு, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?

News February 22, 2026

காங்கிரஸுக்காக விஜய் காத்திருக்கிறார்: குஷ்பு

image

தன்னை யாராவது சேர்த்துக் கொள்வார்களா என முயன்று வரும் OPS-ஐ பார்த்தால் பாவமாக உள்ளதாக குஷ்பு கூறியுள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது அவர்களது விருப்பம், ஆனால் விஜயகாந்த் இருந்திருந்தால் இக்கூட்டணி அமைந்திருக்காது என்றார். திமுக – காங்., கூட்டணி இன்னும் உறுதியானதாக தெரியவில்லை என்ற அவர், காங்., கட்சிக்குள்ளேயே விரிசல் உள்ளதால், விஜய் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என கூறினார்.

News February 22, 2026

BREAKING: 2 அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதி

image

<<19105647>>துரைமுருகனை <<>>தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால், கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாள்களாக தொடர் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிய CM நேரில் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!