News January 9, 2026

இன்றிரவு கூட்டணியை அறிவிக்கிறது தேமுதிக

image

2026 தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா இன்று அறிவிப்பார் என எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். அண்மையில், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்த பிரேமலதா கூட்டணி தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தார். கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் நிலையில், இரவு 7 மணி அளவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்று அவர் தெரிவித்தார். மேலும், தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News January 11, 2026

கங்குலியை முந்திய கிங் கோலி

image

இந்திய அணிக்காக அதிக ODI விளையாடியவர்கள் பட்டியலில் கங்குலியை (308) பின்னுக்கு தள்ளி கோலி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இன்று NZ-க்கு எதிராக அவர் விளையாடுவது 309-வது ODI ஆகும். இதில் சச்சின் (463), தோனி (347), டிராவிட் (340), அசாருதின் (334) முதல் 4 இடங்களில் உள்ளனர். 2027 WC வரை கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் 39 போட்டிகளில் விளையாடினால் தோனியை முந்த வாய்ப்புள்ளது.

News January 11, 2026

பாஜகவுக்கு ஸ்வாஹா பாடுனோம்: செல்லூர் ராஜு

image

மதுரையில் PM மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்று அம்மாவட்ட SP ஆபீஸில் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போது, அதிமுக நிர்வாகிகளும் வந்திருந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, மனு கொடுக்க வந்த பாஜகவுடன் ஸ்வாஹா பாடிவிட்டு வந்திருப்பதாக கலகலப்பாக கூறினார். மேலும், 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி என்ற அவர், உண்மையான விடியல் அப்போதுதான் என்றும் தெரிவித்தார்.

News January 11, 2026

பொங்கல் விடுமுறை.. மகிழ்ச்சி அறிவிப்பு வருகிறது

image

பொங்கல் பண்டிகைக்கு ஜன.15, 16, 17 அரசு விடுமுறை மற்றும் ஜன.18 ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில், வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஜன.14-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுமா என அரசு ஊழியர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அறிவிப்பை நாளைக்குள் அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!