News November 25, 2025

இன்னும் 50 நாட்களில் ‘பராசக்தி’

image

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் ஜன.14 பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், திரையரங்குகளை பராசக்தியின் புயல் ஆட்கொள்ள இன்னும் 50 நாள்களே உள்ளதாக கூறி, புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனிடையே, GV பிரகாஷ்குமார் இசையில் படத்தின் 2-வது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது.

Similar News

News April 13, 2026

₹50 கட்டினால், ₹35 லட்சம் வரை கிடைக்கும்! அடடே திட்டம்

image

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் தினமும் ₹50 (மாதத்திற்கு ₹1515) கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 13, 2026

பள்ளியில் டீச்சர் கொடூரக் கொலை.. தமிழகத்தில் அதிர்ச்சி

image

சேலம், ஓமலூர் அருகே காமலாபுரத்தில் அரசு பள்ளியில் வைத்தே ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியை ஸ்ரீவித்யாவின் கணவர் பள்ளிக்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் தாங்காமல் ஸ்ரீவித்யாவை கொடூரமாக கணவரே வெட்டிக் கொலை செய்துள்ளார்.

News April 13, 2026

‘காற்றில் மெல்லிசை குரல்’ நடிகை மீனா கண்ணீர் அஞ்சலி!

image

‘மெல்லிசை ராணி’ என அழைக்கப்பட்ட <<19630749>>பாடகி ஆஷா போஸ்லே<<>> மறைவுக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மும்பையில் இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், ‘உங்கள் நினைவுகள் எப்போதும் நீங்காது, காற்றில் கலந்திருக்கும் உங்கள் மெல்லிசை குரல் எங்களுடன் நிலைத்திருக்கும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் அம்மா’ என நடிகை மீனா உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!