News July 10, 2024
இன்னும் சற்று நேரத்தில் விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 276 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும் என்பதால் வாக்காளர்கள் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News February 13, 2026
விழுப்புரம்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

விழுப்புரம் மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <
News February 13, 2026
விழுப்புரம்: தூக்கில் தொங்கிய பெண் காவலர்!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 2024ஆம் ஆண்டு காவலர் சிலம்பரசனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காவல் குடியிருப்பில் வசித்து வந்த இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி மீது சந்தேகம் கொண்ட சிலம்பரசன் அவரைத் துன்புறுத்தி வந்துள்ளார். மனஉளைச்சலுக்கு ஆளான புவனேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News February 13, 2026
விழுப்புரத்தில் 242 மாற்றுத்திறனாளிகள் கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.10ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில், விழுப்புரத்தில் நேற்று(பிப்.12) மூன்றாவது நாளாக போராடிய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.


