News April 5, 2025

இன்சூரன்ஸ் வெரிஃபிகேஷன் ஆபிசர் வேலை

image

சென்னையில் உள்ள AYU ஹெல்த் அலைடு சர்வீசஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் வெரிஃபிகேஷன் ஆபிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை படிப்பில் டிகிரி பெற்ற 21 – 50 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். முதல்முறையாக வேலை தேடுபவர்களும் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 9003162661 அல்லது 9171911696 என்ற எண்ணை அழைக்கவும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 21, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று எங்கெல்லாம் நடைபெறும்?

image

சென்னை மாநகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 21) 9 வார்டுகளில் நடைபெறவுள்ளது. திருவொற்றியூர் (வார்டு-10, பூந்தோட்டம்), தண்டையார்பேட்டை (வார்டு-48, மின்ட்), இராயபுரம் (வார்டு-58, சிடன்ஹாம்ஸ் சாலை), அம்பத்தூர் (வார்டு-80, சூரப்பேட்டை), தேனாம்பேட்டை (வார்டு-117, மெலனி சாலை), கோடம்பாக்கம் (வார்டு-141, சி.ஐ.டி. நகர்) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

சென்னையில் நாளை கரண்ட் கட்!

image

சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கரணை மீனாட்சி நகர், பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஆண்டனி நகர், புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் ரோடு, வீராசெட்டி தெரு, திருவான்மியூர் சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர் 1 முதல் 3வது பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும். ஷேர்!

News August 20, 2025

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறை தினங்களான ஆக.23, 24 ஆகிய தேதிகளை முன்னிட்டு 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களுக்கு வெள்ளியன்று 340 பேருந்துகளும், சனியன்று 350 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. திருப்பூர், கோவை & ஈரோட்டிலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

error: Content is protected !!