News December 15, 2025

இன்சூரன்ஸால் இந்தியாவில் விளையாடாத மெஸ்ஸி!

image

இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, எந்த கால்பந்து போட்டியிலும் விளையாடாததற்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசிதான் காரணம். மெஸ்ஸி தனது இடது காலை சுமார் ₹8,000 கோடிக்கு இன்சூர் செய்துள்ளார். அர்ஜெண்டினா அல்லது இன்டர் மியாமி அணிகளுக்காக விளையாடும் போது காயமடைந்தால் மட்டுமே அந்த பாலிசி கவராகும். ஆனால், Exhibitional போட்டிகளில் காயம் அடைந்தால், பாலிசி கவராகாது என்பதால், மெஸ்ஸி இந்தியாவில் விளையாடவில்லை என கூறப்படுகிறது.

Similar News

News April 6, 2026

விழுப்புரம்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

விழுப்புரம் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News April 6, 2026

தலைவர் பதவி ராஜினாமாவா? செல்வப்பெருந்தகை

image

தேர்தலுக்கு பின் TN காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக 2 நாள்களுக்கு முன் செல்வப்பெருந்தகை பேசியிருந்தார். இந்த முடிவுக்கு தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு தொடர்பாக உள்கட்சியில் ஏற்பட்ட சலசலப்புகளே காரணம் என பேசப்பட்டது. இந்நிலையில், மக்கள் தன்னை தொகுதியில் முன்புபோல பார்க்க முடியவில்லை என கூறியதால், இம்முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News April 6, 2026

மனைவியை கொன்று சடலத்துடன் படுத்த கணவன்

image

மனைவியை கொன்று அவரது சடலத்துடன் 2 நாள்கள் கணவன் தூங்கிய சம்பவம் ம.பி.,யை அதிர வைத்துள்ளது. மனைவி ரிமா பாய் வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி கணவன் ஜெகதீஷ் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். மனைவி உடலை ஒரு அறையில் வைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் அதே அறையில் 2 நாள்கள் ஜெகதீஷ் தூங்கியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால் கொடூர கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!