News December 15, 2025

இனி 100 நாள் வேலை இல்லை.. 125 நாள்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை (100 நாள் வேலை) மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக, ‘VB-G RAM G’ என்ற பெயரில் புதிய திட்டத்திற்கான மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், இது 125 நாள்கள் வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய திட்டத்திற்கு மாநில அரசே அதிக நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

Similar News

News December 19, 2025

வாக்காளர் பட்டியலில் உங்க பெயரை சரிபார்ப்பது எப்படி?

image

தமிழக வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. உங்களுக்கு வாக்கு இருக்கிறதா என்பதை ஈசியாக ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம். <>https://voters.eci.gov.in/<<>> சென்று அதில் ‘Search in Electoral Roll’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ‘Search by EPIC’ என்ற இடத்தில் உங்கள் அடையாள அட்டை எண், மாநிலத்தை பதிவு செய்தால் உங்கள் முழு விவரம் வந்துவிடும்.

News December 19, 2025

சற்றுமுன்: பிரபல நடிகர் காலமானார்

image

பிரபலமான ‘Waterloo Road’ சீரிஸ் நடிகர் வில்லியம் ரஷ் (31) காலமானார். இதனால் தனது இதயமே நொறுங்கிவிட்டதாக அவரது தாயார் டெப்பி ரஷ் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். வில்லியம்மின் விருப்பப்படியே அவரது உடல் தானம் செய்யப்படும் என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார். ஆனால், அவரது இறப்புக்கான காரணத்தை இதுவரை குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 19, 2025

97.37 லட்சம் வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர்?

image

SIR-க்கு பிறகு தமிழகத்தில் 97.37 (9,37,832) லட்சம் வாக்காளர்கள்<<18614705>> நீக்கப்பட்டுள்ளனர்<<>>. இவர்களில் 26.94 லட்சம் (26,94,672) பேர் இறந்த வாக்காளர்கள் ஆவர். 66.44 (66,44,881) லட்சம் வாக்காளர்கள் முகவரி இல்லாததாலும், 3.39 லட்சம் (3,39,278) வாக்காளர்கள் இரட்டை பதிவுகள் கொண்டவர்களாகவும் இருந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!