News January 24, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
Similar News
News February 8, 2026
விஜய் 72 நாள்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை: EPS

விஜய் ஊழல்வாதி என்பதற்கு வருமான வரி ஏய்ப்பு வழக்கில் கோர்ட் வழங்கிய தீர்ப்பே சாட்சி என்று EPS தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகு வெளியே வரும் துணிவில்லாமல் 72 நாள்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தவர் விஜய் என தெரிவித்த அவர், தனது கட்சி அலுவலகத்தையே 15 நாள்களுக்கு மூடிவைத்ததாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தவெக என்ற கட்சி இருக்கிறதா, இல்லையா என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
News February 8, 2026
FLASH: திமுகவில் இணைந்தனர்.. இபிஎஸ் அதிர்ச்சி

தேர்தல் நெருங்குவதால், கட்சி மாறும் நிகழ்வுகள் வாடிக்கையாகிவிட்டன. சேலத்தில் அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுமாறு அவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். தனது சொந்த மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினரே, திமுகவில் இணைந்திருப்பது EPS தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News February 8, 2026
மம்மூட்டி பெயருக்கு பின் இப்படி ஒரு கதையா?

தனது பெயருக்கு பின்னால் உள்ள சுவாரசியமான கதையை மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி பகிர்ந்துள்ளார். அவரது உண்மையான பெயர் முகமது குட்டி இஸ்மாயில் பெனிபரம்பில். ஆனால், தனது கல்லூரி நண்பர்களிடம் தன்னுடைய பெயர் ‘உமர் ஷெரீப்’ எனக்கூறி வந்துள்ளார். ஒருநாள் தற்செயலாக அவரது அடையாள அட்டையை பார்த்த நண்பர், முகமது குட்டியை தவறுதலாக மம்மூட்டி என உச்சரித்துள்ளார். அன்றுமுதல் அதுவே அவரது பெயராகிவிட்டது.


