News January 9, 2026

இனி யாரும் வாய் திறக்கக் கூடாது: செல்வப்பெருந்தகை

image

கடந்த சில நாள்களாக ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என காங்., நிர்வாகிகள் சிலர் பேசியது திமுக-காங்., கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் எவரும் பேச வேண்டாம் என செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இண்டியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றால், அது, அதிமுக-பாஜக கூட்டணிக்கு தான் பலன் எனவும், அதனை அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News January 18, 2026

1500 குழந்தைகளை மீட்ட பெண் இன்ஸ்பெக்டர்!

image

கடந்த 3 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்ட RPF இன்ஸ்பெக்டர் சந்தனா சின்ஹாவுக்கு Ati Vishisht Rail Seva Puraskar என்ற இந்திய ரயில்வேயின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. லக்னோவின் சார்பாக் ரயில் நிலைய இன்ஸ்பெக்டரான அவர், 2024-ல் 494 & 2025-ல் 1,032 குழந்தைகளை மீட்டுள்ளார். தனியாக நிற்பவர்கள் & கடத்தல் கும்பலிடம் சிக்கிய குழந்தைகளை நுட்பமாக கவனித்து, அதிரடியாக மீட்பதே அவரது ஸ்டைல்.

News January 18, 2026

மாணவர்களுக்கு விடுமுறை.. கூடுதல் பஸ்கள் இயக்கம்

image

பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் சிரமமின்றி சென்னை திரும்ப ஏதுவாக இன்று 5,192 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக <>TNSTC<<>> வெப்சைட் (அ) செயலியில் டிக்கெட் புக் செய்யுங்கள். உங்கள் உறவுகள், நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

சற்றுமுன்: விஜய் அறிவித்தார்

image

ஜனவரி 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. TN மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு அறிக்கை தயாரிக்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திமுகவும், அதிமுகவும் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து வருவதால், விஜய்யும் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு தேர்தல் அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

error: Content is protected !!