News January 24, 2026
இனி பேங்க் Cheque-ல் இப்படி எழுதக்கூடாதா?

பேங்க் செக் எழுதுவதற்கு கருப்பு இங்க் பயன்படுத்த கூடாது என SM-ல் தகவல் பரவிவருகிறது. ஆனால், அதனை முற்றிலுமாக மறுத்து மத்திய உண்மை சரிபார்ப்பு குழு பதிவிட்டுள்ளது. RBI-ன் விதிமுறைகளின் படி, வாடிக்கையாளர்கள் நிரந்தர மையை பயன்படுத்த மட்டுமே அறிவுறுத்தப்படுகிறார்கள். அது எந்த கலர் பேனாவாக வேண்டுமானலும் இருக்கலாம். இது போன்ற தகவல்களை நம்பிவிட வேண்டாம். SHARE.
Similar News
News January 31, 2026
சினிமாவில் இருந்து விலகுகிறேன்.. விஜய் அறிவிப்பு

தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்வை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான முடிவு அல்ல என்று விஜய் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜன நாயகனோடு சினிமாவில் இருந்து விலகுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவை விட்டு விலகுவது வருத்தம் அளிப்பதாக திரைத்துறையினர் பலரும் கவலை தெரிவித்திருந்தனர். விஜய்யின் சினிமா பயணம் பற்றி உங்கள் கருத்து என்ன?
News January 31, 2026
5-வது T20: இந்திய அணி பேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து சொதப்பிவரும் சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அக்சர் படேல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 3-ல் வெற்றிபெற்று இந்திய அணி ஏற்கெனவே தொடரை கைப்பற்றியுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்திலும் இந்தியா வெல்லுமா?
News January 31, 2026
H.ராஜாவுக்கு பக்கவாதம்.. அப்போலோ அறிக்கை

H.ராஜா உடல்நிலை குறித்து அப்போலோ ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேற்று திடீரென்று ஏற்பட்ட பக்கவாத பாதிப்பால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்கவாத பாதிப்பில் இருந்து குணமடைந்து வரும் அவர், குடும்பத்தினருடன் பேசி வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


