News January 22, 2026
இனி டாக்டர் ரோஹித் சர்மா!

மகாராஷ்டிராவின் அஜிங்கியா DY பாட்டீல் பல்கலை., ரோஹித் சர்மாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. கிரிக்கெட்டில் அவரின் ஈடு இணையற்ற பங்களிப்பு & முன்மாதிரியான தலைமைப் பண்பையும் கெளரவிக்கும் விதமாக இந்த பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் யூனிவர்சிட்டியின் பட்டமளிப்பு விழாவில், ஹிட்மேன் கெளரவிக்கப்படவுள்ளார்.
Similar News
News January 28, 2026
தமிழக சட்டமன்ற தேர்தல்.. ECI முடிவு

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பிப்.4, 5 ஆகிய தேதிகளில் ECI ஆலோசனை நடத்துகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தேர்தல் மேற்பார்வையாளராக பணியாற்றவுள்ள அதிகாரிகள் மற்றும் 5 மாநில உள்துறைச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ECI எச்சரித்துள்ளது.
News January 28, 2026
TET தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் 5% குறைப்பு

தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நடத்தப்படும் TET தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 5% குறைக்கப்பட்டு 50% ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 15% குறைக்கப்பட்டு 40% ஆகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு 60% தொடரும். SHARE IT.
News January 28, 2026
விசிகவுக்கு Yes ராமதாஸுக்கு NO.. ஸ்டாலின் போடும் கணக்கு

DMK கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையலாம் என பேசப்பட்ட நிலையில், கூட்டணிக்கு பாமக தேவையில்லை என CM ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக DMK கூட்டணியில் VCK அங்கம் வகிப்பதாலும், கொள்கை ரீதியாகவும் ஒத்துப்போவதாலும் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தும் எந்தக் கட்சியும் வேண்டாம் என கூறிவிட்டாராம். எனவே, தான் கடந்த 2 நாள்களாக DMK அரசை கடுமையாக சாடி ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறாராம்.


