News February 27, 2026

இனி கூகுள் மேப் வழிகாட்டும்!

image

ஆதார் மையங்களை கூகுள் மேப்பில் காண்பிக்க UIDAI கூகுள் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. பெயர் சேர்க்கை அல்லது தகவல் புதுப்பிப்பு போன்ற சேவைகளுக்கு நாடு முழுவதும் உள்ள 60,000க்கும் மேற்பட்ட ஆதார் மையங்களை எளிதாக அடையாளம் காண இந்த முயற்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்பில் பயனர்கள் தேடும்போது, அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களுக்கு செல்வதை இந்த வசதி உறுதி செய்யும்.

Similar News

News March 1, 2026

WhatsApp-ஆல் வரும் பிரச்னை: STOP THIS!

image

WhatsApp-க்கு வரும் தேவையில்லாத போட்டோ, வீடியோக்கள் தானாகவே Save ஆவதால் Storage வேகமான Full ஆகலாம். இதனை தடுக்க, ➤WhatsApp Settings-க்கு சென்று Data Storage and Usage என்ற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤அதில் Media Auto-download என இருக்கும் ➤அதற்கு கீழ் VIDEO, AUDIO, DOCUMENTS என பல ஆப்ஷன்களை காட்டும் ➤அதில் தேவையானதை க்ளிக் செய்து, When using mobile data என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். SHARE.

News March 1, 2026

ரேஷன் கார்டுக்கு பணம்.. அரசு அறிவித்தது

image

புதுச்சேரியில் ரேஷன் பொருள்களுக்கு பதில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனை உணவுக்காக அல்லாமல், பிற தேவைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் டிஜிட்டல் டோக்கன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. RBI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட இதன் மூலம், தேவையான பொருள்களை குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே பெறலாம். இந்த டோக்கனை ஸ்கேன் செய்தால், கடைக்கார்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் செல்லும்.

News March 1, 2026

ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன PM மோடி

image

இன்று பிறந்தநாள் காணும் CM ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி X தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். TN CM ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்ட அவர், நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் அவர் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார். மேலும், அண்ணாமலை, ஓபிஎஸ், ரஜினி, கமல் உள்ளிட்டோரும் CM ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!