News October 4, 2025
இனி காத்திருக்க வேண்டாம்: உடனே கிளியராகும் செக்

காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி டெபாசிட் செய்த செக்கை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் செக் தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். தொடக்கத்தில் செக் பரிவர்த்தனைக்கு ஒரு வாரமான நிலையில் அது தற்போது ஒருநாளாக இருந்து வந்தது.
Similar News
News October 4, 2025
BREAKING: இந்திய அணி அபார வெற்றி!

WI-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் & 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் WI 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 448/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய WI, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 146 ரன்களில் சுருண்டது. ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
News October 4, 2025
சற்றுமுன்: கனமழை வெளுத்து கட்டும்

அரபிக் கடலில் உருவான ‘சக்தி’ புயல்’ வலுவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இன்று, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News October 4, 2025
கரூரில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த 13 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். இதையடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழு, விபத்து நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்தனர். மேலும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருவோர், உயிரிழந்தோர் குடும்பத்தாரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.