News January 3, 2026
இனி கல்யாணம் பண்ணாலும் கிரீன் கார்டு கிடைக்காது!

USA-வில் டிரம்ப் நிர்வாகம், குடியேற்ற சட்டங்களை மிக கடுமையாக்கி வரும் நிலையில், இதில் அடுத்த டார்கெட் Marriage Green Card. அமெரிக்கரை திருமணம் செய்தால் கிரீன் கார்டு பெறலாம் என்பதாலேயே, பல திருமணங்கள் நடைபெற்று வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்க குடிமகனை திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்திற்கு பின் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே கிரீன் கார்டு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3)விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
விஜய்க்கு வாழ்த்து சொன்ன சீமான்

விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதால், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் தவெக மும்முரமாக உள்ளது. இந்நிலையில் விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கு விஜய்க்கு தனது வாழ்த்துகளை சீமான் தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் கேட்கும் சின்னம் கிடைக்காது, கிடைத்தாலும் மாற்றிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டதால் சீமான் மைக் சின்னத்தில் நின்றார்.
News January 24, 2026
FLASH: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,18,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த வாரமே வாங்கி இருந்தால் உங்களுக்கு ₹11,760 மிச்சமாகி இருக்கும். ஆம், ஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்தில் 1 சவரன் தங்கத்தின் விலை ₹1,06,240 ஆக இருந்தது. மறுபுறம், வெள்ளி விலையும் ஒரே வாரத்தில் ₹55,000 அதிகரித்து, 1 கிலோ ₹3.65 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


