News December 28, 2025

இனி ஒரு தம் 72 ரூபாய்.. அதிர்ச்சி

image

புகையிலைப் பொருள்கள் மீதான வரியை அதிகரிக்கும் வகையில் கலால் வரி திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக, குறைந்த விலையில்(₹18) கிடைக்கும் ஒரு சிகரெட்டின் விலை, இனி ₹72-ஆக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என்பதால், இந்த விலையேற்றத்தை வரவேற்று பலரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News December 30, 2025

திருப்பூரில் கூண்டோடு அதிரடி கைது

image

திருப்பூரைச் சேர்ந்தவர் சந்தனகருப்பன். இவர் தனது கைப்பேசி மூலம் இணைய வழியில் விளம்பரத்தை கண்டு பேசி, ரூ.53,000 பணம் கொடுத்துள்ளார். பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மும்பை சென்று மோசடி கும்பல் 13 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று திருப்பூருக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News December 30, 2025

அனைவருக்கும் ₹15,000.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ₹15,000 ஊக்கத்தொகை வழங்குகிறது பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் பயன்பெற EPFO-வில் பதிவு செய்திருக்க வேண்டும், மாத சம்பளம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் https://pmvbry.epfindia.gov.in -ல் அப்ளை பண்ணலாம். 2027 ஜூலை வரை இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். அனைவருக்கும் இத SHARE பண்ணுங்க.

News December 30, 2025

குளிர்காலத்தில் இத சாப்பிடுங்க! ரொம்ப முக்கியம்!

image

குளிர்காலத்தில் எள் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்கின்றனர் டாக்டர்கள். *எள்ளின் வெப்பத்தன்மை, உடலை கதகதப்பாக வைக்கிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துகிறது *கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய செயல்பாட்டை சீராக்குகிறது *சரும வறட்சியை தடுக்கிறது *உடனடி ஆற்றலை வழங்குகிறது *அதேநேரம் ஒரு நாளைக்கு 2 ஸ்பூன்களுக்கு மேல் எடுக்கக்கூடாது.

error: Content is protected !!