News January 28, 2026
இனி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி எளிது: நயினார்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கிய மைல்கல் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் 99% இந்தியப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரி நீக்கப்படும். TN இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், ஜவுளி, தோல், மின்னணு பொருட்கள் ஆகியவை TN-லிருந்து ஏற்றுமதி செய்வது எளிதாகும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 14, 2026
ஆட்சியில் பங்கு.. ராகுலின் நிலைப்பாடு இதுதானா?

ஆட்சியில் பங்கு தேவை என <<19139216>>மாணிக்கம் தாகூர்<<>> கூறிவரும் நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என RS பாரதி மறுத்துள்ளார். கூட்டணி ஆட்சியை TN மக்கள் ஏற்கமாட்டார்கள் என CM ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டதாக குறிப்பிட்ட அவர், அதை ராகுலும் ஏற்றுக்கொண்டதாக கூறினார். மேலும், மகளிருக்கு ₹5,000 வரவு வைத்த பிறகு மக்களின் ஆதரவு திமுகவிற்கு அதிகம் இருப்பதை உணர்ந்து இனி யாரும் ஆட்சியில் பங்கு பற்றி பேசமாட்டார்கள் என்றார்.
News February 14, 2026
பிரபலங்களின் காதலர் தின வாழ்த்து PHOTOS

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் – நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, மிருணாளினி ரவி, ஆதி – நிக்கி கல்ராணி ஆகியோர் இன்ஸ்டாவில் தங்களது போட்டோக்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
News February 14, 2026
மௌனம் காக்கிறாரா விஜய்?

சேலம் <<19134315>>பிரசார கூட்டத்தில்<<>> ஏற்பட்ட உயிரிழப்பு, செய்தியாளர்கள்-நிர்வாகிகள் மோதல், தொண்டர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் TVK மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால், இதுபற்றி விஜய் வாய் திறக்காதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மாற்றத்தை ஏற்படுத்துவேன் என பேசும் விஜய் முதல் வேலையாக நிர்வாகிகள், தொண்டர்களை கண்டித்து ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


