News November 29, 2025

இனி இந்த விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை!

image

<<18418765>>தொழில்நுட்ப கோளாறு<<>> காரணமாக ஏர்பஸ் ஏ320 விமானசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தேவையான சாப்ட்வேர்/ஹார்டுவேர் மாற்றம் முடியும் வரை, ஏ320, ஏ319, ஏ321 ரக விமானங்கள் பறக்க DGCA தடை விதித்துள்ளது. நாளை(நவ.30) காலை 5.30 மணி முதல் தடை அமலுக்கு வர உள்ள நிலையில், பயணிகள் உடனடியாக விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயண திட்டத்தை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News December 1, 2025

திருமாவுக்கு சீக்ரெட் அசைன்மெண்ட்: வானதி சாடல்

image

செங்கோட்டையனை பாஜக இயக்குவதாக கூறும் திருமாவுக்கு வானதி சீனிவாசன் கவுண்ட்டர் அட்டாக் கொடுத்துள்ளார். NDA கூட்டணியில் குழப்பம் விளைவிக்க வேண்டும், மக்கள் மத்தியில் தங்களை பலவீனமாக காட்டவேண்டும் என்றே திருமா அப்படி பேசுவதாக கூறிய அவர், இது அவருக்கு வழங்கப்பட்ட அசைன்மெண்ட் என கூறியுள்ளார். மேலும், மக்களிடம் அதிக வாக்குகள் வாங்கி, ஆட்சி அமைப்பது மட்டுமே எங்களுடைய அசைன்மெண்ட் என தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

BREAKING: விபத்தில் அதிமுக முக்கிய தலைவர் மரணம்

image

அதிமுக மூத்த தலைவர் வி.சி.ராமையா சாலை விபத்தில் உயிரிழந்தார். 2012-ல் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் பொருளாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். வாண்டாகோட்டை அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான ராமையாவின் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News December 1, 2025

சிவகங்கை பஸ் விபத்து: PM மோடி இரங்கல்

image

காரைக்குடி அருகே <<18432348>>அரசு பஸ்கள் விபத்தில்<<>> ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிப்பதாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறிய அவர், PMNRF-ல் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!