News February 12, 2026

இனி ஆதாரில் வீட்டு அட்ரஸை ஈசியா மாத்தலாம்!

image

ஆதார் கார்டில் வீட்டு அட்ரஸை மாற்ற இனி கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. <>ஆதார் ஆப் <<>>மூலம் உங்கள் போனிலிருந்தே இதை எளிதாக செய்யலாம். ஆப்பில் அட்ரஸை மாற்ற தேவையான ஆவணங்களை Upload செய்து, Face authentication முடித்து Request செய்தால் போதும். இதற்காக சேவை கட்டணமாக ₹75 செலுத்த வேண்டும். இந்த பயனுள்ள தகவலை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 18, 2026

US போர்க்கப்பலை ஆயுதம் கடல் மட்டத்திற்கு அனுப்பும்: ஈரான்

image

அமெரிக்கா ஒருபோதும் வெல்ல முடியாது என ஈரானின் உச்ச தலைவர் கொமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வலிமையான ராணுவம் எழுந்து வர முடியாத அளவுக்கு கடுமையாக தாக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார். ஈரானை சுற்றியுள்ள US போர்க்கப்பலை சுட்டிக்காட்டிய அவர், போர்க்கப்பலை விட ஆபத்தானது, அதை கடல் மட்டத்திற்கு அனுப்பக்கூடிய ஆயுதம் எனவும் கூறியுள்ளார்.

News February 18, 2026

இந்தியா பிரான்ஸ் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்து

image

மும்பை வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை PM மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தொடர்ந்து இந்தியாவின் டாடா நிறுவனமும், பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உருவாகியுள்ள எச்125 ரக ஹெலிகாப்டரை காணொலி வாயிலாக இருவரும் அறிமுகம் செய்து வைத்தனர்.

News February 18, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை
▶குறள் எண்: 613
▶குறள்:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
▶பொருள்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

error: Content is protected !!