News March 25, 2026
இந்த விதைகளை தினமும் சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

➤ஆளி(flax) விதைகள்: செரிமானத்தை சீராக்கும், மலச்சிக்கலை தடுக்கும், புற்றுநோயை தடுக்க உதவும் ➤பூசணி விதைகள்: ஆண்களுக்கு புரோஸ்டேட் ஆரோக்கியம், பெண்களுக்கு சிறுநீர்ப்பை ஆரோக்கியத்தை பெருக்கும், தூக்கத்தைப் பெற உதவும் ➤எள் விதைகள்: இதய ஆரோக்கியம் மேம்படும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும் ➤சூரியகாந்தி விதைகள்: உடலின் திசுக்கள், நரம்பு மண்டலங்கள் வலுவடையும், மன அழுத்தம் குறையும். SHARE.
Similar News
News April 11, 2026
BREAKING: சந்தீப் மிட்டல் விடுவிப்பு

லஞ்ச ஒழிப்புத் துறை(DVAC) டிஜிபி பொறுப்பிலிருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்படுவதாக ECI அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஆயுதப்படை டிஜிபி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். இதனிடையே, RSS, பாஜகவின் ஆதரவாளராக இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து அவரை நீக்க வேண்டும் என திமுகவின் TR பாலு, ECI-க்கு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News April 11, 2026
BREAKING: அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு

தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம்(FC) அறிவித்துள்ளது. 11 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற உழைப்போம் என அதன் துணை செயலாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரஜினிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாம். இது சேலம் மாவட்டத்தில் தங்களுக்கு மேலும் பலம் சேர்த்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News April 11, 2026
Periods ஒரு சாக்கு இல்லை.. ஸ்ரீலீலாவின் சர்ச்சை பேச்சு

பீரியட்ஸை காரணம் காட்டி வேலையை தள்ளிபோட்டதில்லை; சம உரிமை வேண்டுமெனில் உடலியல் தடைகளை தாண்டி செல்ல வேண்டும் என ஸ்ரீலீலா பேசியிருந்தார். மாதவிடாய் விடுமுறை என்பது பெண்களுக்கான உரிமை என பேசப்படும் காலத்தில், இவர் இப்படி பேசியுள்ளதற்கு கண்டனம் எழுந்துள்ளது. மாதவிடாய் வலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும் என MBBS படித்த ஸ்ரீலீலாவுக்கு தெரியாதா என மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


