News January 15, 2026
இந்த வருடத்தின் Netflix பண்டிகை லிஸ்ட்!

பொங்கல் திருநாளை இந்த வருடம் தங்களது OTT-ல் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்டை Netflix வெளியிட்டு வருகிறது. சூர்யாவின் 46-வது படம், ரவி மோகன், விஷ்ணு விஷால் என பலரின் படங்களை இந்த வருடம் Stream செய்ய Netflix வாங்கியுள்ளது. #NetflixPandigai என்ற ஹேஷ்டேக்கின் கீழ் வெளியிடப்பட்டு வரும் படங்களின் லிஸ்ட்டை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும். இதில் எந்த படத்தை பார்க்க நீங்க வெயிட்டிங்?
Similar News
News February 17, 2026
3.71 லட்சம் மகளிருக்கு.. தமிழக அரசு அசத்தல் செய்தி

பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 லட்சம் வரை மதிப்பிலான வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கு கடந்த ஏப்ரல் 2025 முதல் பதிவு கட்டணம் 1 % குறைக்கப்பட்டது. இந்நடவடிக்கையின் மூலம் 3,71,705 பெண்கள் இதுவரை பயனடைந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
News February 17, 2026
சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கே.சி.வேணுகோபால்

கூட்டணி விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்றும், மீறி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கே.சி.வேணுகோபால் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டணி குறித்து 2-ம் கட்ட தலைவர்கள் (மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி) பேசுவது, அவர்களின் தனிப்பட்ட கருத்து, அது கட்சியின் கருத்து அல்ல என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
News February 17, 2026
AI-ல் அடுத்த 2 ஆண்டுகளில் ₹16.6 லட்சம் கோடி முதலீடு!

இந்தியா அடுத்த 2 ஆண்டுகளில் AI மற்றும் டேட்டா கட்டமைப்பு தொடர்பான துறைகளில் சுமார் ₹16.6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதில் ₹5.81 லட்சம் கோடி உறுதி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த முதலீடுகளுக்கு நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு (டேட்டா நிறுவனங்களுக்கு 21 ஆண்டு வரி சலுகை) பெரும் ஊக்கமளிப்பதாக குறிப்பிட்டார்.


