News March 13, 2026

இந்த வயதில் முதலீடு ரொம்ப முக்கியம்!

image

பொதுவாக 40-50 வயதுக்குள் எடுக்கப்படும் நிதி முடிவுகள் ஒருவரின் ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் அந்த வயதில் வேலை மாறும்போது PF-ஐ திரும்பப் பெற வேண்டாம் என்றும், அவசரமாக ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வாங்க வேண்டாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பணவீக்கத்தால் பாதிக்கப்படாத சொத்துக்களில் முதலீடு செய்யும்படியும் அறிவுறுத்துகின்றனர்.

Similar News

News April 1, 2026

திருச்சி: முதல் நாளே மகளிர் பயணத்திற்கு கையெப்பம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்.1) தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். இதில் ஸ்டாலின் தெரிவித்ததில், முதலமைச்சரான முதல் நாளே மகளிர் விடியல் பயணத்திற்கு கையெழுத்து போட்டேன், திருச்சியில் மட்டும் 327 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

வீட்டுக்கு 1 கிலோ தங்கம், ஹெலிகாப்டர் தருவேன்: சீமான்

image

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன் என பிரசார கூட்டத்தில் சீமான் கூறியுள்ளார். ’நான் சொல்வதை கேட்பதற்கு இனிக்கிறதா, இதுதான் காதில் தேன் ஊற்றுவது’ என கிண்டலாக பேசிய அவர், இதெல்லாம் எப்படி தர முடியும் என்று என்னிடம் கேட்க முடியாது என பேசியுள்ளார். மற்றவர்கள் எப்படி ₹2,000 ₹3,000 கொடுப்பார்களோ அப்படித்தான் நானும் கொடுப்பேன் என்றார். <<-se>>#TNElection2026<<>>

News April 1, 2026

இனி பிரசாரத்திற்கு நேரில் வரமாட்டாரா விஜய்?

image

கொளத்தூரில் ஸ்தம்பித்த கூட்டத்தால் விஜய் பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்தினார். இதுவே தமிழகம் முழுவதும் நிகழும் என கணிக்கும் விஜய், இனி வீடியோ மூலம் பிரசாரம் செய்யவுள்ளாராம். ஏற்கெனவே ஒவ்வொரு தொகுதி பிரச்னைகளைக் கொண்டு வாக்கு சேகரிக்கும் வடிவில் விஜய் பேசிய வீடியோக்களும் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இனி முக்கிய தொகுதிகளுக்கு மட்டும் விஜய் நேரில் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!