News January 6, 2026

இந்த மாத்திரை அதிகம் எடுக்குறீங்களா?கேன்சர் வரும்!

image

தொட்டதுக்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிடுற ஆளா நீங்க? ஆன்டிபயாடிக்கை அதிகமாக எடுத்தால் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். இதனால், குடல் ஆரோக்கியம் சீர்குலையும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும், நாளடைவில் கேன்சர் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளுங்கள். பலரை கேன்சரில் இருந்து காக்கும், SHARE THIS.

Similar News

News January 23, 2026

மாம்பழம் சின்னம் யாருக்கு? அன்புமணி VS ராமதாஸ் மோதல்

image

NDA கூட்டத்தில் ‘மாம்பழம்’ சின்னம் இடம்பெற்றதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு அன்புமணி பதிலளித்துள்ளார். அதில் ECI தங்களுக்குதான் சின்னத்தை பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்துள்ளதாகவும், இதுகுறித்து ECI-யிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். சின்னம் தொடர்பான இந்த மோதல், வரும் நாள்களில் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 23, 2026

தங்கம், வெள்ளி.. விலை ₹15,000 குறைந்தது

image

காலையில் கிடுகிடுவென உயர்ந்த <<18935296>>தங்கம்<<>>, வெள்ளி விலைகள், மாலையில் மளமளவென சரிந்துள்ளன. வெள்ளி கிலோவுக்கு காலையில் ₹20,000 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. ஆனால், மாலையில் மகிழ்ச்சியளிக்கும் விதமாக கிலோவுக்கு ₹15,000 குறைந்திருக்கிறது. சென்னையில் தற்போது வெள்ளி 1 கிராம் ₹345-க்கும், 1 கிலோ ₹3.45 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News January 23, 2026

ஷாக்கைக் குறைங்க முதல்வரே: நயினார்

image

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுவதைப் போல, வெற்றித் தலைவன் மோடி வருவதற்கு முன்னே வழக்கம் போல, வெற்றுப் புலம்பல் ஒலி தொடங்கி இருக்கிறது என்று ஸ்டாலினுக்கு நயினார் பதிலடி கொடுத்துள்ளார். உங்களது அத்தனைப் போலிக் குற்றச்சாட்டுகளுக்கும் இந்த ஒரு புகைப்படமே (மேலே 2-வது போட்டோ) பதில். அதை பார்த்தபின், ஷாக்கைக் குறைத்து புரட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள் என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!