News December 11, 2024

இந்த போக்கு நல்லதல்ல: SC எச்சரிக்கை

image

தன் மீது தவறாக புனையப்பட்ட குடும்ப வன்முறை வழக்கையும், திருமணத்தையும் ரத்து செய்யக்கோரி தெலங்கானாவை சேர்ந்தவர் SC-இல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், 498A சட்டப்பிரிவை மனைவி தவறாக பயன்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டதுடன், சட்டத்தை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும் எச்சரித்தனர். இதையடுத்து, கணவன் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

Similar News

News September 14, 2025

பவன் செஹ்ராவத்தை நீக்கிய தமிழ் தலைவாஸ்

image

தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் செஹ்ராவத்தை அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் X தள பதிவில் தெரிவித்துள்ளது. இந்த முடிவு அணியின் நடத்தை விதிமுறைகளுக்கு ஏற்ப, தேவையான பரிசீலனைக்கு பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அவருக்கு பதில் அர்ஜுன் தேஷ்வால் கேப்டனாக செயல்படவுள்ளார்.

News September 14, 2025

நிலைபாட்டை மாற்றிய இந்தியா

image

அணிசேரா நாடுகளின் தலைவனாக இந்தியா திகழ்ந்த காலத்தில், பாலஸ்தீன சுதந்திரத்துக்கு தீவிர ஆதரவளித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், அமெரிக்க நாடுகளுடன் நெருக்கமான நிலையில், ஐநாவில் பாலஸ்தீனம் தொடர்பான தீர்மானம் வரும்போது வாக்கெடுப்புகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தது. ஆனால், நேற்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், இந்தியா பழைய நிலைப்பாட்டுக்கு திரும்பியுள்ளதாக கூறுகின்றனர்.

News September 14, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!