News November 1, 2024

இந்த தீபாவளிக்கு உங்களை மகிழ்வித்தது எது?

image

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புதுப் படங்கள் வெளியானதால், திரைப்படங்களை கண்டு ரசித்து உற்சாகமான தீபவாளியாக இம்முறை அமைந்தது. இதில், உங்களை மகிழ்வித்தது

Similar News

News September 12, 2025

சென்னையில் அனுமதி இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியை நடத்துகிறது. இது சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் செப்.12 முதல் அக்.5 வரை காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதில் கொலு பொம்மைகள், ஆடைகள், கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும். அனுமதி இலவசம்.

News September 12, 2025

சென்னை தொழிலதிபரிடம் ரூ.22 கோடி மோசடி

image

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சுவேதரன்யன் (76) என்ற தொழிலதிபர் போலியான ஆன்லைன் தளத்தில் முதலீடு செய்து ரூ.22.30 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருணை சந்தித்து கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், குஜராத், ஆமதாபாத்தைச் சேர்ந்த படேல் ஜே (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

News September 12, 2025

சென்னையில் மினிபஸ் திட்டம் தோல்வி?

image

சென்னையில் தொடங்கப்பட்ட புதிய மினிபஸ் திட்டம், முறையான திட்டமிடல் இல்லாததால் முடங்கியுள்ளது. தகுதி சரிபார்க்காமல் குலுக்கல் முறையில் அனுமதி வழங்கப்பட்டதால், உரிமையாளர்கள் பழைய பேருந்துகளை தன்னிச்சையாக இயக்குகின்றனர். வழித்தடம், கால அட்டவணை குறித்த தகவல்கள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்‌.

error: Content is protected !!