News December 12, 2025
இந்த ஜூஸ் குடித்தால் அவ்வளவு நன்மைகள்!

அவகாடோ பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன. இதை ஜூஸாக அருந்துவது, பின்வரும் நன்மைகளை தரும் என நியூட்ரிஷனிஸ்ட் பரிந்துரைக்கின்றனர்: *இதயத்திற்கு நல்லது *எடை குறைப்புக்கு உதவும் *செரிமானத்தை சீராக்கும் *சருமம், முடி ஆரோக்கியத்துக்கு உதவும் *கண் ஆரோக்கியம் காக்கும் *எலும்பை வலிமையாக்கும் *மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்.
Similar News
News December 15, 2025
தங்கம் விலை மளமளவென மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $29.38 உயர்ந்து, $4,324.69-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் அதிகரித்து வரும் நிலையில், டிச.13-ம் தேதி நிலவரப்படி சவரன் ₹98,960-க்கு விற்பனையானது.
News December 15, 2025
பாஜகவுக்கு எதிராக விஜய் பேசுவதில்லை: பெ.சண்முகம்

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் அணுகுமுறை மாறிவிட்டதாக சிபிஎம் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று முன்னர் கூறி வந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு எந்த இடத்திலுமே பாஜகவை பற்றி பேசவில்லை என விமர்சித்துள்ளார். சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதால் தான், பாஜகவை விஜய் விமர்சிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 15, 2025
என்னதான் ஆச்சு கேப்டனுக்கும், துணை கேப்டனுக்கும்?

இந்திய T20I அணியின் கேப்டனும், துணை கேப்டனும் பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். SA-வுக்கு எதிரான 3-வது T20I-ல் கேப்டன் SKY 12(11) ரன்களும், துணை கேப்டன் கில் 28(28) ரன்களிலும் அவுட்டாகினர். இருவரும் தொடர்ந்து ஏமாற்றி வருவதால், கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கின்றனர். இன்னும் 2 மாதங்களில் T20I WC தொடங்கவுள்ளதால், டாப் ஆர்டரில் அபிஷேக் & திலக் வர்மாவை மட்டுமே நம்பி இருக்க முடியாது அல்லவா?


