News January 13, 2026
இந்த கண்டிஷன்கள் இருக்கா.. பொண்ணே கிடைக்காது!

Superblog.ai என்ற நிறுவனத்தின் CEO சாய் கிருஷ்ணா ஒரு Matchmaking தளம் மூலம் பெண் தேட, அந்த நிறுவனத்தின் CEO-வை அணுகியுள்ளார். பெண்ணுக்கு மது & புகை பழக்கம் இருக்க கூடாது, Vegeterian-ஆக இருக்கணும் என்ற 3 கண்டிஷன்களையும் அவர் சொல்ல, இப்படிபட்ட பெண்ணே கிடைக்க மாட்டார் என Matchmaking தரப்பினர் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர் பதிவிட, நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News January 30, 2026
ரஷ்யா செல்கிறாரா ஜெலன்ஸ்கி?

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா மீண்டும் மாஸ்கோவிற்கு அழைத்துள்ளது. இருப்பினும், அவரிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் ரஷ்யா விடுத்த அழைப்பை ஜெலன்ஸ்கி நிராகரித்திருந்தார். மேலும், தனது நாட்டின் மீது ஏவுகணைகளை வீசும் நாட்டிற்கு தான் செல்லமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
News January 30, 2026
ராசி பலன்கள் (30.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 30, 2026
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் ரிக்டர் அளவுகோலில் 3-ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில், அதன் தாக்கம் சுமார் 20 கிமீ வரை உணரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், செங்குளம், பாட்டாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் சாலையில் தஞ்சம் புகுந்தனர்


