News November 1, 2025
இந்த ஓவியத்தின் விலை ₹120 கோடி

16-ம் நூற்றாண்டை சேர்ந்த முகலாய கால ஓவியர் பசவன் தீட்டிய ஓவியம், தற்போது ₹120 கோடிக்கு ($13.6 மில்லியன்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. மலையின் மீது மரங்களின் கீழ் சிவிங்கிப் புலிகள் குடும்பமாக ஓய்வெடுக்கும் காட்சி இதில் அற்புதமாக தீட்டப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்டி ஏல நிறுவனம் தான் இதை விற்பனை செய்துள்ளது. கலையின் மதிப்பு என்றும் குறையாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
Similar News
News November 1, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை… கலெக்டர்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதால், இன்று (நவ.1) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மழை விடுமுறையை ஈடுசெய்ய, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் முழுநேரம் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க!

வீடுகள், பள்ளிகளுக்கு வெளியே இயற்கை சூழல்களில் குழந்தைகள் விளையாடுவது, அவர்களின் உடல் & மனநலத்துக்கு பெரும் நன்மை செய்வதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் உறுதியாகியுள்ளது. `வெளியே’ என்பது கட்டடத்துக்கு வெளியே என்பதல்ல. மரம், செடிகள் மற்றும் இயற்கை தன்மை மிகுந்த இடங்களாக இருக்க வேண்டும் என்கின்றனர். ஆகவே, எப்போதும் ஸ்மார்ட்போனுடன் தலை கவிழ்ந்திருக்கும் நம் குழந்தைகளின் நிலையை மாற்ற வேண்டும்.
News November 1, 2025
சினிமாவில் பெண்களின் நிறம் பார்ப்பார்கள்: சம்யுக்தா

திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தால், அது வேலைக்கு ஆகாது என்பார்கள் என்று சம்யுக்தா கூறியுள்ளார். சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிது என்ற அவர், நிறம் பார்ப்பார்கள், திருமணம் ஆகிவிட்டதா என்றும் கேட்பார்கள் என தெரிவித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.


