News April 4, 2025
இந்த ஆலயத்தின் அன்னாபிஷேகம் சாப்பிட்டால் மகப்பேறு!

கோவில்பட்டி சொர்ணமலையில் அமைந்தது சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில். மற்ற முருகன் ஆலயங்களை போல் இல்லாமல் இந்த ஆலயத்தில் மூலவராக வேல் வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த ஆலயத்தில் கிருத்திகை நட்சத்திர நாளன்று மூலவரான வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அண்ணா அபிஷேகத்தை க்கு ஏங்குபவர்கள் சாப்பிட்டால் ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
Similar News
News April 5, 2025
தூத்துக்குடி உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

தூத்துக்குடியில் தென்பாகம் உதவி ஆய்வாளர் முத்தமிழ் என்பவர் வழக்கறிஞரை ஒருமையில் பேசியதாக வழக்கறிஞர்கள் கடந்த இரு தினங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இன்று ஆர்ப்பாட்டமும் நடந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் என்பவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
News April 5, 2025
தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டில் சரக்கு கையாளுவதில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்ததில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டில் 41.72 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு இதற்கு முந்தைய நிதியாண்டு கையாண்ட அளவான 41.40 மில்லியன் டன் சரக்குகளை விட அதிகமாக கையாண்டு 0.77 சதவிகிதம் வளர்ச்சி கண்டு சாதனை படைத்துள்ளது.
News April 4, 2025
மீனவர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசி

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், தருவைகுளம் சேர்ந்த 25 விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசி கருவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலோர காவல் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.