News November 13, 2025
இந்த ஆப்பிள் விலை ₹10 கோடி.. ஆனா சாப்பிட முடியாது!

இது மரத்தில் காய்த்த ஆப்பிள் கிடையாது. மும்பையை சேர்ந்த ரோஹித் பிசால் என்பவரின் கைவண்ணத்தில் உருவானது. தங்கமும் வைரமும் கொண்டு இழைக்கப்பட்டுள்ள இது, தாய்லாந்தின் Royal Palace-ல் வைக்கப்பட்டுள்ளது. 1,936 சிறிய ரக வைர கற்களும், 9 கேரட் & 18 கேரட் தங்கத்தினாலும் இந்த ஆப்பிள் செய்யப்பட்டுள்ளது. வெறும் 29.8 கிராம் தான் என்றாலும், இதை வாங்கும் விலைக்கு கிட்டத்தட்ட 4 BMW கார்களை வாங்கி விடலாம்.
Similar News
News November 13, 2025
விரைவில் விஜய்யின் சுற்றுப்பயணம்: அருண்ராஜ்

கரூர் துயருக்கு பிறகு, சமீபத்தில் பொதுக்குழுவை கூட்டிய விஜய், கட்சி பணிகளை விரைவுபடுத்தினார். இந்நிலையில், விரைவில் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தவெக அருண்ராஜ் கூறியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகும் தமிழக மக்கள், விஜய் மீது வைத்துள்ள அன்பு குறையவில்லை என்றும் தெரிவித்தார். திமுக, பாஜகவை தவிர, தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளை அரவணைப்போம் என்று தெளிவுபடுத்தினார்.
News November 13, 2025
வீடியோ கேமில் புதிய சாதனை படைத்த GTA 5

1997-ம் ஆண்டு அறிமுகமான GTA வீடியோ கேமிற்கு உலகளவில் இன்று வரை பல கோடி ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2013-ல் இதன் 5-ம் பாகமான GTA 5 வெளியான நிலையில், இதுவரை 22 கோடி பிரதிகள் விற்கப்பட்டு, புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்திற்கு ₹88,625 கோடி வருவாய் கிடைத்துள்ளது. புதிய திரில்லிங் அம்சங்களுடன் கூடிய GTA 6-ம் பாகம் அடுத்தாண்டு நவம்பரில் வெளியாகிறது.
News November 13, 2025
அண்ணாமலை போல் நயினாருக்கும்.. சேகர்பாபு

தனது பதவிக்காலம் முடிய 2.5 ஆண்டுகள் இருக்கிறது, ஆனால் அவருக்கு (சேகர்பாபு) 2 மாதங்களே உள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தல் முடிந்ததும், அண்ணாமலைக்கு எப்படி பாஜகவினர் அரோகரா போட்டார்களோ, அதேபோல், 2026 தேர்தல் முடிந்ததும் நயினாரின் பதவியை பறிக்க டெல்லி பேக் செய்யும் என்று சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.


