News January 7, 2026
இந்து பெண்களுக்கு எதிரானது பாஜக: வீரபாண்டியன்

திமுக கூட்டணி இந்துக்களுக்கு எதிரானது என கூறிய பியூஷ் கோயலுக்கு வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகதான் அனைத்து இந்து பெண்களுக்கும் எதிரானது என சாடிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியலமைப்பு மதச்சார்பின்மை கோட்பாட்டை புறந்தள்ளிவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், மத நீதியாக மக்களை பிளவுபடுத்த நினைக்கும் வகுப்புவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது எனவும் அவர் கூறினார்.
Similar News
News February 6, 2026
விஜய் மீது இல்லாத குற்றங்களை சுமத்தி வருகின்றனர்: CTR

திமுவின் கைக்கூலிகளாக இருக்கும் அதிமுக தலைவர்கள் தான் தவெகவை விமர்சிக்கிறார்கள் என CTR நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். <<19046133>>திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்<<>> குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் மீது வேறு குறைகள் எதுவும் சொல்ல முடியாததால் இல்லாத களங்கங்களை சொல்லி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு பிறகு மக்கள் அதிமுகவை புறக்கணித்து நீண்ட காலமாகிவிட்டது எனவும் விமர்சித்துள்ளார்.
News February 6, 2026
முன்னாள் எம்எல்ஏ லிங்கமுத்து காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் லிங்கமுத்து(75), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய இவர், CPI-ன் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2011 தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருந்தார். லிங்கமுத்து மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 6, 2026
ஆதியோகி ரத யாத்திரையை துவக்கி வைக்கும் அமைச்சர்கள்!

வரும் பிப்.15-ம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரியில் ஈஷா அறக்கட்டளை சார்பான ஆதியோகி ரத யாத்திரை 3 நாள்கள் நடைபெற உள்ளது. பிப்.8-ம் தேதி புதுச்சேரி அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் & நமச்சிவாயம் அதனை தொடங்கி வைக்கின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற இந்த ரத யாத்திரையை ஆன்மிக தலைவர்கள் மட்டுமே துவக்கி வைத்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் அமைச்சர்களே இதனை துவக்கி வைப்பது கவனம் பெற்றுள்ளது.


