News July 10, 2025
இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 1/2

தமிழக இந்து சமய அறநிலையத் துறை, வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ள 05 எழுத்தர், அலுவலக உதவியாளர், மடப்பள்ளி, காவலர், திருவலகு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 19.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதி என்ன உள்ளிட்ட விவரங்களை <<17016321>>இங்கே <<>>தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!
Similar News
News July 10, 2025
சென்னையில் திகிலூட்டும் 6 இடங்கள்

▶️ டீமான்டி காலனி – ஆழ்வார்பேட்டை
▶️ உடைந்த பாலம் – பெசன்ட் நகர்
▶️ நிழல் வழிச்சாலை – பெசன்ட் நகர்
▶️ வால்மீகி நகர் – திருமான்மியூர்
▶️ விக்டோரியா விடுதி சாலை – சேப்பாக்கம்
▶️ ப்ளூ கிராஸ் ரோடு – பெசன்ட் நகர்
உங்களுக்கு திகில் நிறைந்த அனுபவம் பிடிக்கும் என்றால், இங்கெல்லாம் நீங்கள் அழைத்து செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்து திகில் அனுபவத்தை பெறுங்கள்.
News July 10, 2025
பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு (9445030523). எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
News July 10, 2025
‘விடியல் பயணம்’ திட்டத்தில் பெண்கள் பயணம் அதிகரிப்பு

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டணமில்லா ‘விடியல் பயணம்’ திட்டத்தில், கடந்த ஜூன் மாதம் வரை 140.38 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 3.69 கோடி பெண்கள் பயணித்துள்ளனர், இது கடந்த ஆண்டை விட 22% அதிகம். ஒரு நாளைக்குச் சராசரியாக 12.32 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயணிக்கின்றனர். இத்திட்டம் பெண்களின் பயணத்தை எளிதாக்கி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.