News July 23, 2024
இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மாற்றம்

காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையராக 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த வான்மதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையராக பணி மாற்றம் செய்து அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்டத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த குமரத்துறை, காஞ்சிபுரம் இணை ஆணையராக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 28, 2025
காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வாகனங்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் மூலம், சாலையோர உணவு வியாபாரிகளுக்கு 50 வியாபார வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. சென்னை மாநகராட்சியில் இருந்து பெறப்பட்ட இந்த வாகனங்களை, குலுக்கல் முறையில் தகுதியான 50 வியாபாரிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
News August 28, 2025
பரந்தூர் விமான நிலையம்: சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி மாலை காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை ஏற்கிறார். இதில் அப்பகுதி கிராம மக்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
News August 28, 2025
காஞ்சிபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.