News July 5, 2025

இந்து சமயம் அறநிலை சார்பில் மூன்று திருமணம்

image

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் கா.சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மூன்று ஜோடிகளுக்கு இன்று (ஜூலை.4) திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்கள் அனைவரும் எம்.எல்.ஏ மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வாழ்த்துகளைப் பெற்றனர். இத்திருமணம் அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Similar News

News September 28, 2025

செங்கல்பட்டு: மின்சாரம் பாய்ந்து பறிபோன இரு உயிர்கள்

image

பம்மலில், பிரியாணி கடை கிடங்கில் எலக்ட்ரிக்கல் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், எதிர் பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பலியாகினர். அனகாபுத்துார், திருமுருகன் தெருவை சேர்ந்த மணிகண்டன் 35, என்பவர், எலக்ட்ரிக்கல் வேலையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற சென்ற பிரியாணி மாஸ்டர் பார்த்திபன் 32, என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

News September 28, 2025

செங்கல்பட்டு: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, செங்கல்பட்டு மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News September 28, 2025

செங்கல்பட்டு: TNSTC சூப்பர் அறிவிப்பு..உனனே APPLY பண்ணுங்க

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் போன்ற 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகள் (மாதம் ரூ.9,000) & டிப்ளமோவுக்கு (மாதம் ரூ.8,000) உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். <>விண்ணப்பிக்க<<>> அக்-18 கடைசித் தேதி. நேரடித் தேர்வு/நேர்காணல் இல்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!