News December 22, 2025

இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்.. காஜல் போஸ்ட்!

image

மௌனம் உங்களை காப்பாற்றாது, இந்துக்களே விழித்து கொள்ளுங்கள் என காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாவில், வங்கதேசத்தில் எரித்து கொல்லப்பட்ட தீபு சந்திரதாஸ் என்பவர் குறித்த போட்டோவை பகிர்ந்து, அதில், அனைத்து கண்களும் வங்காளதேச இந்துக்களின் மீது எனவும் குறிப்பிட்டுள்ளார். காஜல் அகர்வாலின் இப்பதிவு வைரலாகியுள்ளது. தொடர்ந்து வங்கதேசத்தில் கலவரங்களும், மதம் தொடர்பான மோதல்களும் வெடித்துள்ளன.

Similar News

News December 27, 2025

BREAKING: பொங்கல் பரிசு.. தமிழக அரசு அறிவித்தது

image

பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாராக உள்ளது, ஜன.10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

News December 27, 2025

15 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு கட்டிய இங்கிலாந்து

image

ஆஷஸ் தொடரின் முதல் 3 டெஸ்ட்டுகளை தோல்வியடைந்த இங்கிலாந்து, 4-வது போட்டியில் <<18683771>>போராடி வெற்றி<<>> பெற்றது. அதுமட்டுமின்றி ஆஸி., மண்ணில் 15 ஆண்டுகளாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அங்கு இதுவரை 18 போட்டிகளில் இங்கி., தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. கடைசியாக 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியிருந்தது.

News December 27, 2025

மகளிர் உரிமைத்தொகை இனி ₹2,500.. புதுவை CM அறிவித்தார்

image

புதுச்சேரியில் மகளிர் உரிமைத்தொகை ₹1,000-ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவையில் நடைபெற்ற வீரதீர குழந்தைகள் தினவிழாவில் பேசிய அவர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். TN-ல் உரிமைத்தொகையாக ₹1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இது உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!