News September 27, 2025
இந்திரா நகர் பகுதியில் 2 புதிய சிசிடிவி கேமராக்கள்

ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறையின் SAFE RAMNAD பாதுகாப்பான சமூகக் கூட்டமைப்பு முயற்சியின் கீழ், துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் (26.09.2025) அன்று பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 2 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பையும் குற்றச்செயல்களை தடுக்கும் முயற்சியையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
ராம்நாடு: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <
News January 24, 2026
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மிதமான மழை பெய்து வரும் நிலையில், நாளை(ஜன.25) கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.
News January 24, 2026
இராம்நாடு: அணி மாறும் எம்.பி; வலுக்கும் போட்டி!

ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான ராஜ்யசபா எம்.பி தர்மர், அதிமுகவில் இன்று இணைய உள்ளார் என தகவல். முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி நவாஸ்கனி, அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எம்.பி தர்மர் அதிமுகவில் இணைவது இபிஎஸ்-க்கு கூடுதல் வலு சேர்க்கும் என கூறப்படுகிறது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரத்தில் கடும் போட்டி உருவாகலாம்!


