News September 14, 2024
இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: அமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொது பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜிவ், இந்திரா சிக்னல் வரை மேம்பாலம் தேவையா என மத்திய அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ராஜிவ், இந்திரா சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அறிக்கை சமர்ப்பித்து, மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஓரிரு மாதத்தில் வந்து விடும் என்றார்.
Similar News
News November 9, 2025
புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
புதுச்சேரி: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை

நிரவி விழிதியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21), இவர் திருநள்ளாறை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த மணிகண்டன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 9, 2025
புதுவையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த மாணவி

புதுச்சேரி, மூலக்குளம் பகுதியில் உள்ள ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ராமு. இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரின் மூத்த மகள் லோகேஸ்வரி கடந்த 5-ம் தேதி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காண்பித்து பரிசோதனை செய்ததில் இவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று லோகேஸ்வரி உயிரிழந்துள்ளார்.


