News March 9, 2026
இந்திய வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்!

மூன்றாவது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா கோப்பையை வென்றதும் அதன் கொண்டாட்டம்<<19333207>> நாடு முழுவதும் எதிரொலித்தது.<<>> குறிப்பாக முக்கிய பங்கு வகித்த இந்திய அணி வீரர்கள் அகமதாபாத் மைதானத்திலேயே தங்களின் வெற்றியை உற்சாகமாக கோப்பையுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியான தருணங்களை காண வலதுபக்கம் Swipe செய்து பாருங்கள்!
Similar News
News March 30, 2026
குன்றத்தூர் அருகே பயங்கர விபத்து!

காஞ்சிபுரம்: குன்றத்தூரில் இருந்து போரூர் நோக்கி கார் ஒன்று நேற்று(மார்ச் 29) மாலை வேகமாக சென்று கொண்டிருந்தது. குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அருகே சென்று கொண்டிருந்த போது வேகமாக சென்ற கார் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதியதில், தடுப்புச் சுவரில் இருந்த சோலார் மின் கம்பம் அப்படியே சாய்ந்தது. கார் ஓட்டியவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 30, 2026
பெண்ணை காலில் மிதித்தபடி நிற்கும் அனுமன் கோயில்!

கையில் கதாயுதத்துடன் பெரும்பாலான கோயில்களில் சாந்த ஸ்வரூபியாக காட்சி தரும் அனுமன், ‘கஷ்டபஞ்சன் அனுமன்’ கோயிலில் மட்டும் பெண்ணை காலால் மிதிப்பது போன்ற தோற்றத்தில் உக்கிரமாக காட்சி தருகிறார். குஜராத்தின் போடாட் மாவட்டத்திலுள்ள இக்கோயிலில் அவர் மிதித்துக் கொண்டிருப்பது, சனி பகவானின் பெண் வடிவம் என கூறப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால், நிவர்த்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
News March 30, 2026
பிரசாரத்தில் அஜித் போட்டோவுடன் EPS

கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து EPS தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள், EPS-அஜித் ஒன்றாக அமர்ந்திருக்கும் போட்டோவை அவருக்கு பரிசளித்தனர். அதை EPS மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியில் உயர்த்தியும் காண்பித்தார். அதில், ‘Never Ever Give Up’ என்ற அஜித் பட வசனமும் இடம்பெற்றிருந்தது. <<-se>>#TNElection2026<<>>


