News May 23, 2024
இந்திய மருத்துவ சங்க குழு தேசிய ஒருங்கிணைப்பாளர் நியமனம்

இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ் ஆண்டி மைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் குழு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாட்டை தடுக்கும் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளராக சேலம் ஜாகிர் அம்மாபாளத்தை சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் மூத்த தலைவரான டாக்டர்கள் அசோகன் அபுல்ஹாசன் பிரகாசம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News April 14, 2026
BREAKING: நாளை சேலம் வருகிறார் கமல்ஹாசன்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பேரணி நாளை (15-04-2026) சேலத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் M.P. கலந்து கொள்ள உள்ளார் என அக்கட்சி அறிவிப்பு: நாளை மாலை 5 மணியளவில் அண்ணா பூங்கா அருகே உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவுச்சிலை அருகே தொடங்கும் இந்தப் பேரணி, கோட்டை மைதானத்தில் நிறைவடையும்
News April 14, 2026
சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News April 14, 2026
JUST IN: நாளை சேலம் வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாளை (15.04.2026) தருமபுரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை 4:30 மணிக்கு சேலம் வரும் தமிழக முதல்வர், அண்ணா பூங்கா அருகே உள்ள கலைஞர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து கோட்டை மைதானம் வரை நடைபெறும் பிரம்மாண்ட மகளிர் பேரணியில் நடந்து செல்லும் அவர், பொதுக்கூட்டத்தில் 11 தொகுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார். இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.


