News November 3, 2025
இந்திய மகளிர் அணிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து

ODI WC வென்ற இந்திய அணிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றியானது பல தலைமுறைகளை பெரிதாக கனவு காணவும், தைரியமாக விளையாடவும் ஊக்குவிக்கும் என்றும் X-ல் அவர் கூறியுள்ளார். மகளிர் அணியின் வெற்றி தேசத்திற்கு பெருமை தேடி தந்திருப்பதாக EPS புகழாரம் சூட்டியுள்ளார். இதே போல விஜய், அண்ணாமலை, நயினார், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் X-ல் வாழ்த்து பதிவிட்டுள்ளனர்.
Similar News
News November 3, 2025
கல்யாணத்துக்கு மாப்பிள்ளை போட்ட நூதன கண்டிஷன்கள்!

கல்யாணத்துக்கு இந்த மாப்பிள்ளை போட்ட 10 கண்டிஷன்கள் தான் இன்று ஹாட் டாபிக். Pre wedding Photoshoot வைக்க கூடாது, தாலிக்கட்டும் போது கேமராமேன் தொந்தரவு செய்யக்கூடாது, கல்யாணத்தில் DJ இருக்கக்கூடாது என கட் அண்ட் ரைட்டாக கண்டிஷன் வைத்துள்ளார். மேலே இருக்கும் போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணி, அவரின் மொத்த கண்டிஷனையும் தெரிஞ்சிக்கோங்க. இவரின் கண்டிஷன் குறித்து நீங்க என்ன சொல்றீங்க?
News November 3, 2025
ரஜினி படத்தில் அடுத்த மாஸ் ஹீரோ.. அப்ப சரவெடிதான்!

‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து ரஜினி, சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட வேலைகளில் சுந்தர்.சி இறங்கியுள்ள நிலையில், தற்போது அப்படத்தின் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. ஆம், இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ராகவா லாரன்ஸையும் நடிக்க வைக்க, சுந்தர்.சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். கலக்குமா இந்த காம்போ?
News November 3, 2025
BREAKING: விஜய் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க தவெக அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பஸ்சில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இதனால், தவெக அலுவலகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


