News August 26, 2024
இந்திய பாரா கிரிக்கெட் போட்டியில் பெரம்பலூர் வீரர்

பெரம்பலூர் குரும்பலூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது (29), 3 ஆண்டுகளாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். கோவையில் வருகிற 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெறும் இந்திய பாரா கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாட ஷேக் முகமது தேர்வாகி உள்ளார். இதற்கு முன்பு விஸ்வகுடியை சேர்ந்த ரமேஷ் (26) என்பவர் ஏற்கனவே தேர்வாகி, துணைத்தலைவராக உள்ளார்.
Similar News
News March 3, 2026
பெரம்பலூர்: தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு எவ்வாறு பணியில் ஈடுபட வேண்டும், எவ்வாறு விரைவாக செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
News March 3, 2026
பெரம்பலூர்: 69 பேர் பொதுத்தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் நேற்று 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசுப் பொதுத்தேர்வு நடைபெற்றது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 36 தேர்வு மையங்களில் 82 பள்ளிகளைச் சேர்ந்த 7,276 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 7207 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 69 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
பெரம்பலூர்: 69 பேர் பொதுத்தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, அரசுப் பொதுத்தேர்வு நடைபெற்றது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 36 தேர்வு மையங்களில் 82 பள்ளிகளைச் சேர்ந்த 7,276 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 7207 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 69 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


