News November 25, 2025

இந்திய பயணத்தை மீண்டும் ரத்து செய்த இஸ்ரேல் PM

image

இஸ்ரேல் PM நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, PM மோடியை சந்திக்க நெதன்யாகு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகான பாதுகாப்பு சூழலை காரணம் காட்டி பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டில் 3-வது முறையாக அவரின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 31, 2026

அண்ணாமலையை தேர்தலில் போட்டியிட வைக்க தீவிரம்

image

கடந்த சில நாள்களாக அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை தேர்தல் பணியில் சுணக்கம் காட்டுவதால், அவரின் ஆதரவாளர்கள் உற்சாகம் இழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலையை சமரசம் செய்து, தேர்தலில் போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படும் நிலையில், அதில் அண்ணாமலை பெயர் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

ஈரான் போர்: சிமென்ட், கம்பிகள் விலை உயர்கிறது!

image

சிமென்ட் விலை நாளை முதல் மூட்டைக்கு ₹50- ₹70 வரை உயரும் என தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஈரான்-அமெரிக்கா இடையே நிலவும் போரால், சிமென்ட் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் வளைகுடா நாடுகளிலிருந்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், சிமென்ட் விலை உயர்த்தப்படுகிறது. இதேபோல், கட்டுமான கம்பிகள் விலை டன்னுக்கு ₹2,000 வரை உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!