News December 18, 2025
இந்திய சினிமாவின் First.. சூர்யா 47-ல் புது டெக்னாலஜி

சூர்யா 47 படத்தில் இந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாத புதிய முயற்சி ஒன்று செய்யப்பட்டு வருகிறது. படத்தை ARRI Alexa 265 கேமராவில் படமாக்கி வருகிறார்கள். தற்போதைய டெக்னாலஜியில் பெரிய திரைக்கு ஏற்ற பிரீமியம் கேமரா இதுவாம். ஹாலிவுட்டில் The Revenant, Rogue One போன்ற படங்களில் இக்கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படத்தில் நஸ்லன், நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிசம்பர்- 29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 29, 2025
சேலத்தில் நடைபெற்றது பொதுக்குழுவே அல்ல: பாலு

அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு விதிமுறைகள், <<18701469>>சேலம் பொதுக்குழுவில்<<>> மீறப்பட்டுள்ளதாக பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். ராமதாஸ் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே அல்ல எனவும் அவர் சாடியுள்ளார். அந்த பொதுக்குழு முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என்றும், மாமல்லபுரம் பொதுக்குழுவில் அன்புமணிக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு ECI அங்கீகாரம் தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News December 29, 2025
பாரதிராஜா கவலைக்கிடமா..? Clarity

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாள்களுக்கு முன் இயக்குநர் பாரதிராஜா <<18691522>>ஹாஸ்பிடலில் <<>>அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பாரதிராஜா நலமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நிலை குறித்து வெளிவரும் மற்ற தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


