News February 4, 2026

இந்திய சந்தையை US-க்கு வாடகைக்கு விட்டதா? சு.வெ.,

image

இந்திய-US வர்த்தக ஒப்பந்தத்தில் PM மோடி சரணாகதி அடைந்தார் என்பதை US செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளதாக MP சு.வெங்கடேசன் சாடியுள்ளார். ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக பியூஷ் கோயல் கூறும் நிலையில், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளை US அதிகாரி பட்டியலிடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்தியாவின் நிர்வாகத்தை US-க்கு உள் வாடகைக்கு விட்டதா BJP எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Similar News

News February 10, 2026

நீண்டகால பேன் தொல்லையால் 12 வயது சிறுமி பலி!

image

ஒடிசாவின் பூரி நகரில் நீண்டகால பேன் தொல்லை காரணமாக லட்சுமிப்ரியா சாஹூ என்ற 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பேன் தொல்லையால் சிறுமி அவதிப்பட்டு வந்ததாகவும், பலகட்ட சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறினர். இதற்கிடையே சிறுமியின் மரணம் குறித்து மாவட்ட தலைமை, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

News February 10, 2026

கார்களின் விலை மளமளவென குறைந்தது!

image

கார் வாங்க போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், ஹோண்டா தனது வெவ்வேறு மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் கார்களுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News February 10, 2026

காங்கிரஸிடம் CM பொறுமை காக்க இதான் காரணமா?

image

சீட் ஷேரிங்கில் திமுக கூட்டணிக்கு காங்., பெரும் நெருக்கடியாக மாறியிருக்கிறது. ஆனால், காங்., எவ்வளவு ஆட்டம் காட்டினாலும், எந்த ஆக்‌ஷனும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின். இதற்கு, இண்டியா கூட்டணியை கட்டமைத்த தானே அதை உடைத்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதே காரணமாம். அதேநேரம் அவர்களுக்கான தொகுதிகளை உயர்த்தி வழங்கமுடியாது என்பதிலும் திமுக தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!