News June 14, 2024
இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் கருத்தரங்கம்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 40 பணியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக துறைமுகத்தில் நிகழ்நேர செயல்விளக்கம், எண்ணெய் கசிவை எதிர்க்கும் கருவிகள் மற்றும் நுட்பங்களை காட்சிப்படுத்தியது.
Similar News
News March 1, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
புதுச்சேரி நாதக வேட்பாளா்கள் மாா்ச் 7-ல் அறிமுகம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மார்ச் 7ஆம் தேதி அறிமுகப்படுவுள்ளதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதே நாளில் மாலை 4 மணிக்கு புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் திடலில் (முருகா திரையரங்கம் அருகில்) நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News March 1, 2026
புதுச்சேரியில் பொதுத்தேர்வுகள் தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, நாளை 2ம் தேதி துவங்கி வரும் 26ம் தேதிவரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவ, மாணவிகள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுத உள்ளனர். கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி நேற்று தெரிவித்தார்.


