News October 4, 2025
இந்திய கடலோர காவல்படை சார்பில் புதிய கப்பல்

இந்திய கடலோர காவல்படை சார்பில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடற் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட புதிய ‘அக்ஷர்’ என்கின்ற புதிய ரோந்து கப்பல் தொடக்க விழா காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் நடைபெற்றது. இந்திய கடலோர காவல் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் தீப்தி மோஹில் சாவ்லா தலைமையில் நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் கலந்து கொண்டனர்.
Similar News
News April 7, 2026
புதுச்சேரி மத்திய சிறையில் தபால் வாக்குப்பதிவு ஆய்வு

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், காலாப்பட்டு மத்திய சிறையில் தடுப்புக் காவலில் உள்ள வாக்காளர்களுக்காக ஏப்ரல் 6 அன்று தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நேரில் பங்கேற்று வாக்குப்பதிவு நடைமுறைகளை பார்வையிட்டார். மேலும் கைதிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
News April 7, 2026
புதுச்சேரி: இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2000 – ராகுல்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் இன்று (ஏப்ரல் 6) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், 30000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
News April 7, 2026
புதுச்சேரி: தேர்தல் சாவடிகளுக்கு கட்டுப்பாடு

புதுவை தேர்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்குச் சாவடியின் நுழைவு வாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் வேட்பாளரோ (அ) அரசியல் கட்சியோ தற்காலிக தேர்தல் சாவடிகளை அமைக்க கூடாது. வாக்குப்பதிவு நாளன்று, வாக்கு சாவடியை சுற்றியுள்ள 100 மீட்டர் பரப்பளவிற்குள் எந்த விதமான தேர்தல் பிரச்சாரமும் செய்ய அனுமதி கிடையாது. இந்த விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


